பேய் மாதிரி வருவான்... இறங்கி செய்வான்... : ரத்தம் தெறிக்கும் ராயன் பட டிரைலர்
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள அவரது 50வது படம் ‛ராயன்'. தனுஷே இயக்கி உள்ளார். அவருடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூலை 26ல் படம் வெளியாக உள்ள நிலையில் பட ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. தற்போது இதன் டிரைலரை இன்று(ஜூலை 16) மாலை 6 மணியளவில் வெளியிட்டுள்ளனர்.
இதன் படம் சென்சாரில் ஏ சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.