அம்பானி வீட்டு திருமணம் : அட்லி இயக்கிய 10 நிமிட அனிமேஷன் படம்
ADDED : 526 days ago
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம் சமீபத்தில் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை பாலிவுட் திரையுலகமே திரண்டு வந்து மணமக்களை வாழ்த்திய நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி, பிரியா அட்லி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்றார்கள். இந்த திருமண நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தை பற்றி அட்லி இயக்கிய 10 நிமிட அனிமேஷன் படம் ஒன்று ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். அதற்கு நடிகர் அமிதாப்பச்சன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில் பல பிரபல இயக்குனர்கள் இருந்தபோதும் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வகையில் இந்த வாய்ப்பு அட்லிக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.