நடிகர் திலகத்திற்கு நாட்டியாஞ்சலி
ADDED : 444 days ago
நடிகர் திலகம் சிவாஜியின் நினைவு தினம் நாளை(ஜூலை 21) அனுசரிக்கப்டுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான நிகழ்ச்சியாக முதல் நிகழ்ச்சியாக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. பாரத் கலாச்சார், சிவாஜி ரசிகர் மன்றம், அப்பாஸ் கல்சுரல் அமைப்புகள் இணைந்து இதனை நடத்துகின்றன.
நாளை மாலை 6 மணிக்கு தி.நகர் பத்மசேஷாத்திரி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒய்ஜிபி ஆடிட்டோரித்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 'மன்னவன் வந்தானடி' என்ற தலைப்பில் சிவாஜியின் படங்களில் இடம் பெற்ற பாடல்களுக்கு டாக்டர் ராதி சுராஜித் குழுவினர் நடனமாடி சிவாஜிக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.