மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
438 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
438 days ago
மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சிபிஐ டைரி குறிப்பு என்கிற படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அடுத்தடுத்து இந்த படத்தின் நான்கு பாகங்கள் வெளியான நிலையில் கடந்த 2022ல் இந்த படத்தின் ஐந்தாம் பாகமாக ‛சிபிஐ 5 ; தி பிரைன்' என்கிற படம் வெளியானது. இந்த ஐந்து பாகங்களுக்கும் கதை எழுதியவர் பிரபல சீனியர் கதாசிரியரான எஸ்.என் சுவாமி என்பவர் தான். மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகியோர் நடித்த பல வெற்றி படங்களுக்கு கதை எழுதிய இவர், முதல் முறையாக தற்போது தனது 73வது வயதில் இயக்குனராக மாறி ‛சீக்ரெட்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் வினீத் சீனிவாசனின் தம்பியும், நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா படத்தின் இயக்குனருமான தியான் சீனிவாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. மம்முட்டி இந்த டிரைலரை வெளியிட்டுள்ளார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்ற எஸ்என் சுவாமி மம்முட்டியின் கையால் இந்த டிரைலரை வெளியிட வைத்துள்ளார். இந்த நிகழ்வின் போது இயக்குனர் கவுதம் மேனனும் உடன் இருந்தார். ஒரு இயக்குனராகவும் எஸ்என் சுவாமி வெற்றி வருவார் என எதிர்பார்க்கலாம்.
438 days ago
438 days ago