கவின் உடன் ரொமான்ஸ் செய்யும் நயன்தாரா
ADDED : 458 days ago
அன்னப்பூரணி படத்தை அடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டெஸ்ட், டியர் ஸ்டூடண்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2 , டாக்சிக் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு என்பவர் இயக்கும் படத்தில் கவினுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். தன்னை விட ஐந்து வயது அதிகமான பெண்ணுடன் இளைஞருக்கு ஏற்படும் காதல் குறித்த கதையில் இந்த படம் உருவாகிறதாம். இந்த படத்தில் கவின் உடன் நெருக்கமாக நடித்தபடி ரொமான்ஸ் செய்யும் ஒரு புகைப்படத்தை ‛Hi' என குறிப்பிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.