மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
406 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
406 days ago
வேட்டையன் படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கூலி' படத்தில் நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பு இல்லாததால் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்த பேரனை அவரே காரில் அழைத்து சென்றுள்ளார்.
நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா. இயக்குனராக உள்ள இவரது மூத்த மகன் வேத். காரில் அப்பா ரஜினி மற்றும் மகன் வேத் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து சவுந்தர்யா வெளியிட்ட பதிவு : ‛‛எனது மகன் இன்று பள்ளிக்கு போக மாட்டேன் என அடம் பிடித்தான். அவனது சூப்பர் ஹீரோ தாத்தா(ரஜினி) பள்ளிக்கு அழைத்து சென்றார். திரையிலும், நிஜ வாழ்விலும் நீங்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாகவே செய்து விடுகிறீர்கள் என் அப்பா'' என நெகிழ்ச்சி உடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு போட்டோவில் ரஜினி பள்ளிக்கு வந்துள்ளதை பார்த்து அந்த பள்ளியின் வகுப்பறையில் உள்ள மாணவர்கள் ஆச்சர்யத்துடன், மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
406 days ago
406 days ago