உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.16 கோடி மோசடி: ரவீந்தர் சந்திரசேர், மகாலட்சுமி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

ரூ.16 கோடி மோசடி: ரவீந்தர் சந்திரசேர், மகாலட்சுமி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில படங்களை தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நகராட்சி திடக்கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம் என்று தன்னை ஏமாற்றி ரவீந்தர் சந்திரசேகர் 16 கோடி மோசடி செய்துவிட்டதாக சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி என்பவர் புகார் அளித்தார். அதன்பேரில் அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு மாத காலம் சிறை தண்டனை அனுபவித்த அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று ரவீந்தர் சந்திரசேகரும், மகாலட்சுமியும் வாழும் அசோக் நகர் வீடு உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆணங்களின் அடிப்படையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !