உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோட் பட டிரைலர் ரிலீஸ் எப்போது? - வெங்கட் பிரபு தகவல்

கோட் பட டிரைலர் ரிலீஸ் எப்போது? - வெங்கட் பிரபு தகவல்

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் கோட் படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று மூன்றாவது பாடல் வெளியாகிறது. அடுத்து இப்படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கோட் படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறுகையில், கோட் படத்தின் டிரைலரை படம் திரைக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதனால் இம்மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் டிரைலர் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !