உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் ‛விடாமுயற்சி, குட் பேட் அக்லி' புதிய போஸ்டர்கள் வெளியீடு

அஜித்தின் ‛விடாமுயற்சி, குட் பேட் அக்லி' புதிய போஸ்டர்கள் வெளியீடு

அமராவதி படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார் அஜித் குமார். இவர் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையொட்டி விடாமுயற்சி படத்திலிருந்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்தபோஸ்டரில், 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி என்ற வாசகமும், அஜித் முகத்தில் ரத்தமும் இடம் பெற்றுள்ளது.



தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தபடியாக குட் பேட் அக்லி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடர உள்ளது. விடாமுயற்சிக்கு புதிய போஸ்டர் வெளியிட்டது போன்று குட் பேட் அக்லி படத்திற்கும் அஜித்தின் 32 வருட திரை பயணத்தை குறிப்பிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !