மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
421 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
421 days ago
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. அப்பா கங்கை அமரன் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆக இருந்தாலும் சினிமாவில் முதன் முதலில் ஒரு பாடகராகத்தான் நுழைந்தார் வெங்கட். சில பாடல்களைப் பாடிய பின்னர் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.
2007ம் ஆண்டில் அவர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான 'சென்னை 28' எதிர்பாராத வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது. அதன்பின் அவர் இயக்கிய 'சரோஜா, கோவா' சரியாகப் போகவில்லை என்றாலும் தனது படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் அஜித். வெங்கட் பிரபு இயக்க, அஜித் நாயகனாக நடித்து 2011ல் வெளிவந்த 'மங்காத்தா' படம் பெரும் வெற்றியைப் பெற்று அஜித்திற்கும் ஒரு திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் 'பிரியாணி, மாசு, சென்னை 28 பார்ட் 2' படங்களை இயக்கியவர் 2021ல் 'மாநாடு' என்ற மீண்டும் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
அதன்பின் வந்த 'மன்மனத லீலை' படத்தை வெங்கட் பிரபுதான் இயக்கினாரா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. கடந்த வருடம் வெளிவந்த 'கஸ்டடி' படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் விஜய்யின் 68வது படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் வெங்கட். அந்தப் படம் 'தி கோட்' ஆக உருவாகி அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
வெங்கட் பிரபு இயக்குனராக பணியாற்றிய முதல் நாள் ஆகஸ்ட் 7, 2006. அதை நினைவுகூர்ந்து அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்துப் படங்களிலும் தவறாமல் நடிக்கும் தம்பி பிரேம்ஜி, “சென்னை 28 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 18 வருடங்களுக்கு முன்பு இதே நாளில்…786,” என நினைவு கூர்ந்துள்ளார்.
421 days ago
421 days ago