பி 2 இருவர் : புது முகங்களின் ஹாரர் திரில்லர் படம்
ADDED : 538 days ago
அறம் புரொடக்ஷன் சார்பில் ராமலிங்கம் தயாரித்துள்ள படம் பி 2 இருவர். கன்னடம், தெலுங்கு உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள பஹத் விக்ராந்த் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். யாத்திசை படத்தில் நடித்த சித்து கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் சிவம் கூறியதாவது: முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நம்பிக்கை துரோகத்தை மையமாக வைத்து ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. வருகிற 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்றார்.