கதை நாயகன் ஆனார் கல்லூரி வினோத்
ADDED : 437 days ago
ஆர்.கே. கிரியேட்டிவ் மேக்கர்ஸ் சார்பில் வீரா தயாரிக்கும் படம் 'அப்பு VI-STD'. இப்படத்தில் கல்லூரி படத்தில் நாயகனின் நண்பனாக அறிமுகமான வினோத் முதன்முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறார். மாரி, ஸ்கெட்ச், அயோத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் வீரா, ஜீவன் பிரபாகர், தேனப்பன், வேலு பிரபாகரன், டார்லிங் மதன், விஜய் சத்யா, பிரியங்கா, ரோபோ ஷங்கர், சுப்பிரமணி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் வசீகரன் பாலாஜி இயக்குக்கிறார். ஆலன் விஜய் ஒழிப்பு பதிவு செய்கிறார் தீபக் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.