உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீல்ஸ்களில் சாதனை படைத்த 'அல்லு அர்ஜுன் 23'

ரீல்ஸ்களில் சாதனை படைத்த 'அல்லு அர்ஜுன் 23'


'புஷ்பா 1, 2' படங்கள் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாது வெளிநாட்டு சினிமா ரசிகர்களிடமும் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவர் அடுத்தடுத்து தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்.

தற்போது அவரது 22வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். அதற்கடுத்து அவரது 23வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி 14ம் தேதியன்று வெளியானது.

அதற்காக ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது. காமிக்ஸ் வடிவிலான அந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்தது. அந்த காமிக் வடிவ உருவங்களை வைத்தும், அந்த பின்னணி இசையை வைத்தும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் தொடர்ந்து நிறைய ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஒரு படத்தின் அறிவிப்பு வீடியோவிற்கு அதிக அளவிலான ரீல்ஸ்கள் இந்த 'எஎ 23 தீம்' வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அனிருத்தின் இந்த தீம் இசை தெலுங்கு சினிமா ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அல்லு அர்ஜுன், லோகேஷ், அனிருத் கூட்டணி சேர்ந்துள்ள இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழிலும் உருவாக உள்ளது என்பது கூடுதல் தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !