உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தர்ஷினின் போட்டோவை கோவிலில் வைத்து பூஜை செய்த அர்ச்சகர் சஸ்பெண்ட்

தர்ஷினின் போட்டோவை கோவிலில் வைத்து பூஜை செய்த அர்ச்சகர் சஸ்பெண்ட்

கன்னட முன்னணி நடிகர்களின் ஒருவரான தர்ஷன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது காதலி நடிகை பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்தார் என்பதால் தன்னுடைய ஆட்களை சேர்த்துக் கொண்டு இந்த கொலையை செய்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அவரது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட இன்னும் 15க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தர்ஷனுக்கு ஜாமீன் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில் அவரது மனைவி விஜயலட்சுமி தொடர்ந்து இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதுடன் கணவருக்காக கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம் ஆகியவற்றை செய்து வருகிறார்.

இப்படி இருக்க தர்ஷனின் தீவிர ரசிகரான மல்லிகார்ஜுன் சுவாமி என்கிற அர்ச்சகர் ஒருவர் தான் பணி புரியும் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள தொட்டா புவனேஸ்வரா கோவிலில் தர்ஷனின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்த நிகழ்வு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ ஒன்றும் சோஷியல் மீடியாவில் வெளியானது. இதனை தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் அந்த அர்ச்சகர் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !