மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
394 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
394 days ago
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் அதன் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் மீது ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க நியிமிக்கப்பட்ட சிறப்பு ஆடிட்டர் ஒருவர் அளித்த அறிக்கையின்படி, சங்கத்தின் தொகையான 12 கோடி ரூபாய் வரை அவர் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகை அது என்றும் குறிப்பிட்டிருந்தது. இனிவரும் காலங்களில் விஷால் நடிக்கும் படங்களைத் தயாரிக்க உள்ள தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை ஆலோசித்த பின் அவர்களது பணிகளைத் துவங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள்.
அதற்கு விளக்கம் கேட்டு நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், “சிறப்பு ஆடிட்டர் அளித்த அறிக்கை குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. சங்க சட்டவிதிகளின் அடிப்படையில் சங்க பொறுப்பாளர்கள் செயலாளராக இருந்த கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் தீர்மானங்களின்படி தான் உறுப்பினர்களுக்கு சிறப்பான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் வங்கிக் கணக்கில்தான் அவை நேரடியாக செலுத்தப்பட்டன. இப்போதுள்ள நிர்வாகிகளும் அப்போது செய்த திட்டங்கள் மூலம் பலன் பெற்றுள்ளார்கள். சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ளது. சங்கத்திற்கு வருவாய் ஈட்ட ஏசகமனதாக ஒப்புதல் பெற்று தான் 'இளையராஜா 75' நிகழ்ச்சி நடத்தினோம்.
1.என்னை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏன் கலந்தாலோசிக்க வேண்டும் ?,
2.விஷால் என்ற நடிகருக்கு தயாரிப்பாளர் சங்கம் விதிக்கும் மறைமுக ரெட்கார்ட்- ஆ?,
394 days ago
394 days ago