உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட அப்டேட் : தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட அப்டேட் : தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி

தனுஷ் இயக்குனராக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கின்றார். அவருடன் இணைந்து அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வுண்டர்பார் பிலிம்ஸ் ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்போது ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். இப்படத்தில் முதல் பாடலுக்கான கடைசி மிக்ஸிங் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்பாடலை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கூடுதல் தகவலை பகிர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !