தொட்டு தொட்டு பேசும் சுல்தானா- சிம்ரனையே அலறவிட்ட அதிதி ஷங்கர்!
ADDED : 423 days ago
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே ஹிட் அடித்த நிலையில் , அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த மாவீரன் படமும் 100 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது நேசிப்பாயா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர், தான் அதிரடி நடனமாடும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். தற்போது, எதிரும் புதிரும் படத்தில் ராஜு சுந்தரத்துடன் சிம்ரன் நடனமாடிய, தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு அவருக்கே டப் கொடுக்கும் வகையில் அதிரடி நடனமாடிய ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.