கோழிப்பண்ணை செல்லத்துரை செப்., 20ல் ரிலீஸ்
ADDED : 423 days ago
சீனு ராமசாமி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லத்துரை. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட.பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டர் உடன் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், அன்பானவர்களுக்கு வணக்கம். உங்கள் ஆதரவு வேண்டி எனது இயக்கத்தில் ஒன்பதாவது திரைப்படமாக கோழி பண்ணை செல்லத்துரை என்ற படம் செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.