உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் பாடிய தேசபக்தி பாடலுடன் ‛அமரன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

கமல் பாடிய தேசபக்தி பாடலுடன் ‛அமரன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் சண்டை காட்சிகளும், பொதுமக்கள் பாதிக்கப்படும் உருக்கமான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவில், போர் சொல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான். நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா என்ற உணர்வு பூர்வமான தேசபக்தி பாடலை கமல் பாடியுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !