தேவாரா படத்தின் படப்பிடிப்பை முடித்த ஜூனியர் என்டிஆர்
ADDED : 424 days ago
கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இதில் ஜான்வி கபூர் , சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடலை பின்னணியாக கொண்டு ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி அன்று திரைக்கு வருவதை யொட்டி நேற்று இந்த படத்தின் தனது சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாக ஜூனியர் என்டிஆர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.