அனுராக்கின் வெப்சீரிஸில் ஜிவி பிரகாஷ் : தமிழ், ஹிந்தியில் உருவாகிறது
ADDED : 424 days ago
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி. வி. பிரகாஷ் முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மறுபுறம் கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது முதல் முறையாக வெப் தொடரில் நடிக்கவுள்ளார். பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா போன்ற படங்களில் நடிகராகவும் அசத்தினார். அடுத்து இவர் 8 பகுதிகளாக கொண்டு திரில்லரான வெப்சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார். இதில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க உள்ளார். தமிழ், ஹிந்தி இருமொழிகளிலும் உருவாகும் இந்த தொடர் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஏற்கனவே அனுராக்கின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இப்போது முதன்முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கிறார்.