அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்ட லைகா நிறுவனம்!
ADDED : 440 days ago
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கடைசியாக ரெஜினாவின் போஸ்டரை வெளியிட்ட லைகா நிறுவனம், இன்று விடாமுயற்சி படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிகில் நாயரின் போஸ்டரை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இந்த போஸ்டர் வெளியானதை அடுத்து தொடர்ந்து போஸ்டர் மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் செய்தியை அறிவியுங்கள் என்று அஜித் ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.