உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்.,10ல் ரிலீஸாகிறது 'வேட்டையன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அக்.,10ல் ரிலீஸாகிறது 'வேட்டையன்': அதிகாரப்பூர்வ அறிவிப்பு


ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'வேட்டையன்'. அவருடன் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பஹத் பாசில், ராணா, ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியை இன்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 10ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'கங்குவா' படமும் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !