சிம்பிளாக நடந்து முடிந்த ரித்திகா வளைகாப்பு
ADDED : 418 days ago
பாக்கியலெட்சுமி சீரியல் நடிகையான ரித்திகா தமிழ்ச்செல்வி, குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார். திருமணத்திற்கு பின் நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் அவருக்கு நேற்றைய தினம் சிம்பிளாக வளைகாப்பு நிகழ்வு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான பவித்ரா ஜனனி, ஸ்ரீதேவி அசோக், தர்ஷிகா, அஜய் கிருஷ்ணா, ஸ்யமந்தா கிரண், அம்மு அபிராமி ஆகியோர் கலந்து கொண்டு ரித்திகாவிற்கு நலுங்கு வைத்து வாழ்த்தியுள்ளனர்.