தங்கலான் - பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்
ADDED : 416 days ago
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛தங்கலான்'. கோலார் தங்க வயல் பின்னணியில் இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. ரஞ்சித் படம் என்றாலே அதில் ஏதாவது ஒரு சர்ச்சை எழும். அந்தவகையில் இந்த படத்திலும் சர்ச்சை இருப்பதாக கூறி ரஞ்சித் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வக்கீல் பொற்கொடி என்பவர் புகார் அளித்துள்ளார்.
அதில், தங்கலான் படத்தில் புத்த மதத்தை உயர்வாக காட்ட, வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகள் இருப்பதாகவும், அதை படத்திலிருந்து நீக்க வேண்டும் என கூறி ரஞ்சித் மீது புகார் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவேன் என குறிப்பிட்டுள்ளார்.