இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய ஷ்ரத்தா கபூர்
ADDED : 412 days ago
ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகை ஷ்ரத்தா கபூர். தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான ‛சாஹோ' படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஆக் ஷன் வேடத்தில் நடித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஹிந்தி படமான ‛ஸ்ட்ரீ 2' சூப்பர் ஹிட்டாகி ரூ.300 கோடி வசூலை தாண்டி உள்ளது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 9.15 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இன்ஸ்டாவில் அதிக பாலோயர்களை கொண்ட மூன்றாவது பிரபலமாக இவர் மாறி உள்ளார். முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(27.1 கோடி), இரண்டாமிடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா(9.18 கோடி) ஆகியோர் உள்ளனர்.
முன்னதாக மூன்றாம் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி(9.13 கோடி) இருந்தார்.