உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்தில் தயாராகும் திகில் தொடர்

மலையாளத்தில் தயாராகும் திகில் தொடர்


மலையாளத்தில் தயாராகி இருக்கும் வெப் தொடர் '100 பேபிஸ்'. இதில் நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகாராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இர்ஷாத் அலி, ஷாஜு ஸ்ரீதர், காலேஷ் ராமானந்த், ஸ்ரீகாந்த் முரளி மற்றும் ஜேம்ஸ் ஆலியா நடித்துள்ளனர். பைஸ் சித்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார், சங்கர் சர்மா இசை அமைத்துள்ளார். நஜீம் கோயா இயக்கியுள்ளார்.

ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா தயாரித்துள்ளனர். ஹாலிவுட் பாணியில் திகில் தொடராக உருவாகி உள்ளது. மலையாளத்தில் தயாரானாலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !