உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பம்பர் பட இயக்குனருடன் இணையும் அருள்நிதி!

பம்பர் பட இயக்குனருடன் இணையும் அருள்நிதி!


நடிகர் அருள்நிதி தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த 'டிமான்டி காலனி 2' வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவர் அடுத்து இன்னும் வித்தியாசமான கதைகளை இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றி நடித்து வெளிவந்த 'பம்பர்' படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !