பிளாஷ்பேக்: புராண படத்தில் ஜோடியாக நடித்த கமல் - ஸ்ரீதேவி
ADDED : 417 days ago
கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் 'மேட் பார் ஈச் அதர்' ஜோடியாக வலம் வந்தார்கள். இருவரும் ஒரு புராண படத்திலும் ஜோடியாக நடித்தார்கள். அந்த படம் 'சத்யவான் சாவித்ரி'. ஆனால் இது மலையாள படம். சத்யவானாக கமல்ஹாசனும், சாவித்ரியாக ஸ்ரீதேவியும் நடித்திருந்தார்கள்.
இவர்களுடன் அடூர் பாசி, சுகுமாறன் நாயர், ஜோஸ் பிரகாஷ், கவியூர் பொன்னம்மா, ஸ்ரீலதா நம்பூதிரி உள்பட பலர் நடித்திருந்தார்கள். பி.ஜி.விஸ்வம்பரன் இயக்கி இருந்தார். ராஜகோபால் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஜி.தேவராஜன் இசை அமைத்திருந்தார்.
1977ம் ஆண்டு வெளியான இந்த படம், வண்ணத்தில் தயாராகி இருந்தது. தமிழில் 'சத்யவான் சாவித்ரி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சத்யவான்துடு' என்ற பெயரிலும் வெளியானது. மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படம் தமிழ் தெலுங்கில் வரவேற்பை பெறவில்லை.