உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமன்னாவுடன் 5000 போட்டோக்கள் : காதலர் தந்த தகவல்

தமன்னாவுடன் 5000 போட்டோக்கள் : காதலர் தந்த தகவல்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. அவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'அரண்மனை 4' படம் 100 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. தமிழில் இன்னும் சில புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

நடிகை தமன்னாவும், ஹிந்தி நடிகரான விஜய் வர்மாவும் காதலிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், “நானும் தமன்னாவும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பல என்னிடம் உள்ளன. மொத்தமாக 5000 புகைப்படங்கள் இருக்கும். ஆனாலும், அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை நாங்கள் தவிர்த்துவிட்டோம். அதை நாங்கள் மதிக்க வேண்டும், எங்கள் இதயத்தில் அன்பாக வைத்திருக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெப் சீரிசில் நடிக்கும் போதுதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது இருவரது புகைப்படங்கள் சில வெளியாகி அவர்களிடையே உள்ள காதலையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !