உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமையலுக்காக மற்றுமொரு நிகழ்ச்சி - ஆனா இது வேற மாதிரி

சமையலுக்காக மற்றுமொரு நிகழ்ச்சி - ஆனா இது வேற மாதிரி

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ஒரு மவுசு இருந்து வருகிறது. அதை முற்றிலும் என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியாக, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற நிகழ்ச்சியாக மாற்றியது விஜய் டிவியின் குக் வித் கோமாளி தான். தற்போது வெங்கடேஷ் பட் மற்றொரு டிவியுடன் இணைந்து குக் வித் கோமாளி ஸ்டைலிலேயே டாப்பு குக்கு டூப்பு குக்கு என்கிற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜீ தமிழும் தனது பங்கிற்கு சமையல் எக்ஸ்பிரஸ் என்கிற புதியதொரு சமையல் நிகழ்ச்சியை களமிறக்கியுள்ளது. பிரபல நடிகை சீதா கலந்து கொண்டுள்ள இந்நிகழ்ச்சியின் புரோமோவானது அண்மையில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !