விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர் - மகாலெட்சுமி
ADDED : 408 days ago
திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தரும், சின்னத்திரை நடிகையான மகாலெட்சுமியும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை பலரும் கேலி, கிண்டல் என விமர்சித்து வந்ததோடு இவரும் மூன்று மாதங்களுக்குள் பிரிந்து விடுவார்கள் என்றும் கூறி வந்தனர். ஆனால், இதையெல்லாம் கடந்து ரவீந்தர் - மஹாலெட்சுமி தம்பதியினர் அண்மையில் தங்களது இரண்டாவது திருமணநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்து ரவீந்தர் வெளியிட்டுள்ள பதிவில் 'நம்ம நல்லா இருக்கணும்னு நினைக்கிற கூட்டம் உங்கள் கிட்ட இருக்கும் வரை உங்களுக்கு மகிழ்ச்சி தான். எங்கள இனியும் கிண்டல், உருவகேலி செய்வதில் பலனில்லை. மூன்று மாதம் தாங்குமா இவங்க கல்யாணம்னு கேட்டவங்களுக்கு என்னோட அன்பான பதில் மறக்காம எங்க போட்டோவுக்கு லைக் அண்ட் ஷேர் பண்ணிடுங்க' என்று தரமான பதிலடி கொடுத்துள்ளார்.