திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்த கடைசி உலகப்போர் படக்குழு
ADDED : 666 days ago
மீசையை முறுக்கு, சிவகுமாரின் சபதம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக 'கடைசி உலகப்போர்' எனும் படத்தை இசையமைத்து, இயக்கி நடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இதனை அவரே தயாரித்தும் உள்ளார். கதாநாயகியாக அனகா நடித்துள்ளார். நட்டி நட்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போர் கதைகளத்தை மையப்படுத்தி பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திடீரென அறிவித்துள்ளனர்.