உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாணுக்கு குரல் கொடுக்கும் சிம்பு

பவன் கல்யாணுக்கு குரல் கொடுக்கும் சிம்பு

சாஹோ பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ.ஜி' . பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜூன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இன்னும் சில நாட்கள் நடந்தால் இதன் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிடும். இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை நடிகர் சிலம்பரசனை பாட வைக்க தமன் பேச்சுவார்த்தை நடத்தி சிம்பு சம்மதம் தெரிவித்துள்ளார் என்கிறார்கள். ஏற்கனவே தெலுங்கு சினிமா நடிகர்களில் சிம்புவுக்கு பிடித்த நடிகர் பவன் கல்யாண் என்பது அனைவரும் அறிந்தது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !