லதா ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய அஷ்வத் - கண்மணி
ADDED : 419 days ago
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத் மற்றும் கண்மணி மனோகரான் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். திருமணத்திற்காக பத்திரிகையும் அடித்தாகிவிட்டது. இந்நிலையில், தங்களது திருமண பத்திரிகையுடன் லதா ரஜினிகாந்தை ஜோடியாக சென்று சந்தித்த அஷ்வத் - கண்மணி அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அஷ்வத், 'திருமதி லதா ரஜினிகாந்தை சந்தித்து எங்களது திருமணத்திற்கு அழைக்கும் பெருமை கிடைத்தது. எங்கள் திருமணத்திற்கு தொடர்ந்து பலரது அன்பு மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைத்து வருகிறது. எங்கள் இதயம் தற்போது நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.