நான் அப்படி நடிக்க மாட்டேன் - பிரியா பவானி சங்கர் பேட்டி
ADDED : 418 days ago
சின்னத்திரை செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் நடித்த அவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'மாடர்ன் உடை அணிந்து நடித்தால் சினிமாவில் உயர்ந்து விடலாம் என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். மாடர்ன் உடையில் நடிப்பது தான் மிகவும் சவாலான விஷயம். நான் அவ்வாறு உடை அணிந்து நடிக்கமாட்டேன். இப்போது நான் நடித்து வரும் கதாபாத்திரமே எனக்கு வசதியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நான் மாடர்ன் உடை அணிந்து கிளாமராக நடிப்பதை என் ரசிகர்களும் ஏற்கமாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.