சினேகாவை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையும் சிம்ரன்
ADDED : 404 days ago
கோட் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. மலையாள நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் ஏற்கனவே கமிட்டான நிலையில், தற்போது சிம்ரனும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே மற்றும் யூத் போன்ற படங்களில் நடித்த சிம்ரன் தற்போது விஜய் 69 வது படத்தின் மூலம் மீண்டும் அவருடன் இணைகிறார்.
சமீபத்தில் வெளியான கோட் படத்தில் விஜய்யின் மனைவியாக நடிகை சினேகா நடித்து மீண்டும் விஜய் உடன் இணைந்தார். இவரை தொடர்ந்து இப்போது சிம்ரனும் இணைய உள்ளார்.