ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நாயகனாகும் சந்தீப் கிஷன்
ADDED : 406 days ago
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போவதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது வரை அந்த படம் தொடங்கப்படவில்லை. அதோடு அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கவின், சூரி ஆகியோர் ஹீரோவாக நடிப்பதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் மாநகரம் , ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.