சூர்யா 44வது படத்தில் அப்பா உடன் இணைந்த காளிதாஸ் ஜெயராம்
ADDED : 401 days ago
கங்குவா படத்தை முடித்துவிட்டு அதன் ரிலீஸ் எதிர்பார்த்துள்ளார் சூர்யா. அடுத்தப்படியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 44 வது படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கப்பட்ட நிலையில், அதையடுத்து ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர். தற்போது ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராமும் சூர்யா 44 வது படத்தில் இணைந்திருக்கிறார். அந்த வகையில் அப்பாவும், மகனும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.