முகத்தில் தீக்காயத்துடன் கனிகா? பதறிய ரசிகர்கள்
ADDED : 452 days ago
தென்னிந்திய சினிமா நடிகையான கனிகா எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் அண்மையில் முகத்தில் தீக்காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கனிகாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்டு வந்தனர். ஆனால், அது உண்மையான தீக்காயம் அல்ல. அண்மையில் வெளியாகியுள்ள விஜய்யின் கோட் படத்தின் ஒரு காட்சியில் கனிகா நடித்திருக்கிறார். அதற்காக போடப்பட்ட மேக்கப் தான் அந்த புகைப்படம். கோட் படத்தை பார்க்காத ரசிகர்கள் பலரும் விவரம் புரியாமல் கனிகாவை நினைத்து பதறி வருகின்றனர்.