உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியலிலிருந்து விலகியது ஏன்? சாய் காயத்ரி விளக்கம்

சீரியலிலிருந்து விலகியது ஏன்? சாய் காயத்ரி விளக்கம்


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பிறகு ‛நீ நான் காதல்' தொடரில், அனு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சாய் காயத்ரி. இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் திடீரென சீரியலை விட்டு விலகிவிட்டார். சாய் காயத்ரிக்கு பதிலாக தற்போது அனு கதாபாத்திரத்தில் அர்ஷிதா நடித்து வருகிறார். இந்நிலையில், சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை சாய் காயத்ரி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

அதில், 'எதிர்பாராத உடல்நலக்குறைவு காரணமாக நீ நான் காதல் தொடரிலிருந்து விலகுகிறேன். கடவுளின் அருளாலும் உங்களது அன்பு மற்றும் பேராதரவாலும் விரைவிலேயே மீண்டும் திரையில் வருவேன்' என்று கூறி கடந்த ஒருவருட காலமாக தன்னுடன் பயணித்த நீ நான் காதல் மொத்த குழுவினருக்கும் நன்றி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !