காதலரை கரம்பிடித்த மேகா ஆகாஷ்: சென்னையில் எளிய முறையில் நடந்த திருமணம்
ADDED : 445 days ago
பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், ஒரு பக்க கதை, என்னை நோக்கி பாயும் தோட்டா, வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் என பல படங்களில் நடித்தவர் மேகா ஆகாஷ். சமீபத்தில் தனது காதலரான சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்த மேகா ஆகாஷ், திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
சென்னையில் நடைபெற்ற சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திமுகவின் பல அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இன்று (செப்.,15) மேகா ஆகாஷின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.