உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்!

லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்!


பிரபல தொழிலதிபர் மற்றும் நடிகர் லெஜண்ட் சரவணன் நடிகராக 'லெஜண்ட்' எனும் படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தற்போது எதிர்நீச்சல், கொடி, கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் தனது 2வது படத்தில் நடித்து வருகின்றார்.

தற்போது இதன் படப்பிடிப்பு தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது. இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக பயல் ராஜ்புட் இணைந்துள்ளார். மேலும், இதில் ஷாம் மற்றும் ஆண்ட்ரியா என இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சரவணன் அளித்துள்ள ஒரு பேட்டியில், என்னுடைய இரண்டாவது படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்து வருகிறேன். இந்த படத்தில் என்னை வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்கள் பார்க்கலாம். நான் மட்டுமின்றி மற்ற நடிகர் நடிகைகளும் மேக்கப் இல்லாமல் எதார்த்தமாகவே நடிக்கிறார்கள். இந்த படம் அனைத்து மக்களும் ரசிக்க கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !