உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன்: 'தி கோட்' படத்தில் நடந்த மாற்றம்!

சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன்: 'தி கோட்' படத்தில் நடந்த மாற்றம்!


வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த வாரத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பல பிரபலமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த இந்த சிறப்பு தோற்றத்தில் முதலில் நடிக்கவிருந்தத நடிகர் சிலம்பரசன் தான். ஆனால், அவர் தக் லைப் படத்தில் நடித்து வந்ததால் தி கோட் படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !