உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மெய்யழகன் சண்டைக்காட்சி பற்றி கார்த்தி உடைத்த சஸ்பென்ஸ்

மெய்யழகன் சண்டைக்காட்சி பற்றி கார்த்தி உடைத்த சஸ்பென்ஸ்


கார்த்தி நடிப்பில் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் படம் மெய்யழகன். 96 புகழ் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், அதே படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். கார்த்திக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார் சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் (டீசர்) வெளியான நிலையில் நேற்று இரவு சென்னையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “கைதி படத்தில் நடித்தபோது முழுக்க முழுக்க இரவில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து சண்டைக் காட்சிகள், சேசிங் காட்சிகள் என லோகேஷ் கனகராஜ் பெண்டு நிமிர்த்தி விட்டார். அதற்கு பிறகு முழு படமும் கிட்டத்தட்ட இரவு நேரம் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டது என்றால் இந்த மெய்யழகன் படத்தில் தான். ஆனால் இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சி கூட இல்லை. ஆனாலும் இது ஒரு பக்காவான கமர்சியல் படம்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !