அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ்
ADDED : 350 days ago
த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. அமிதாப் பச்சன், பஹத் பாசில் , மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, கிஷோர் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் முதல்முறையாக நேரடி தமிழ் படமாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஹிந்தி பதிப்பில் அமிதாப்பச்சன் அவரது கதாபாத்திரத்திற்கு அவரே குரல் கொடுத்துள்ளார். ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி பதிப்புகளில் அமிதாப்பச்சன் கதாப்பாத்திரத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்துள்ளார். இதில் அமிதாப்பச்சன் குரல் போன்ற நம்பகத்தன்மைக்கு சற்று ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனராம்.