மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2!
ADDED : 394 days ago
சர்தார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2ம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகமும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் கார்த்தி கூட்டணியில் உருவாகிறது. இந்த பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த படத்தை அறிவிப்பதற்காக ஸ்பெஷல் ஆக ஒரு ‛சர்தார் 2' டைட்டில் டீசரை படமாக்கினர். இப்போது இந்த டைட்டில் டீசர், வருகின்ற செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் மெய்யழகன் படத்தின் இடைவேளை நேரத்தில் திரையிடுகின்றனர். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.