லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்!
ADDED : 394 days ago
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் சமீபத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்து வெளிவந்த திரைப்படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட் மற்றும் குடும்பம், காதல் என மையப்படுத்தி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு அடுத்த படத்திற்காக பல தயாரிப்பு நிறுவனங்கள் அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தனுஷை வைத்து 'இட்லி கடை' படத்தை தயாரித்து வரும் டாவுன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் அடுத்து படம் இயக்குவதற்காக அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்காக தமிழரசன் பச்சமுத்துவிற்கு ரூ. 1 கோடி சம்பள தொகையாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.