மேலும் செய்திகள்
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
346 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
346 days ago
தமிழில் வெற்றிவேல், தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளவர் மலையாள நடிகை நிகிலா விமல். சில காட்சிகளில் வந்தாலும் முழு நீள கதாபாத்திரம் என்றாலும் மனதில் பதியும்படியான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் மலையாளத்தில் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் திரைப்படமும் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்துவிட்டன.
அதேசமயம் குருவாயூர் அம்பல நடையில் படம் வெற்றி பெறுமா, அதில் உள்ள காமெடி ஒர்க் அவுட் ஆகுமா என்கிற சந்தேகம் படம் வெளியாவதற்கு முன்பே தனக்கு இருந்ததாக கூறியுள்ளார் நிகிலா விமல். அந்த படத்தில் பிரித்விராஜின் மனைவியாக, பிரித்விராஜின் தங்கையை திருமணம் செய்யப்போகும் இளைஞனின் முன்னால் காதலியாக நடித்திருந்தார் நிகிலா விமல். படம் பார்க்கும்போது இவர்கள் வரும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருக்கும்.
ஆனால் இந்த படத்தின் பிரிவியூ ஷோ பார்த்தபோது, பல காட்சிகளில் தனக்கு சிரிப்பு வரவே இல்லை என்று கூறியுள்ள நிகிலா விமல், இந்த படம் வெற்றி பெறுமா என அப்போதே தனக்கு சந்தேகம் தோன்றியது என கூறியுள்ளார். ஆனால் படத்தின் நாயகன் பிரித்விராஜ் படத்தின் மீதும் குறிப்பாக காமெடி காட்சிகளின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவரது நம்பிக்கைதான் வெற்றி பெற்றது என்றும் கூறியுள்ளார்.
346 days ago
346 days ago