கரகாட்டக்காரன் கனகாவா இது?
ADDED : 385 days ago
தமிழ் சினிமாவில் 90-கள் காலக்கட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்தார் நடிகை கனகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்து 1999ம் ஆண்டு முற்றிலுமாக சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். இதனையடுத்து தாயாரின் இறப்பு, அப்பாவுடன் சொத்து தகராறு என தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்னைகளை சந்தித்தார்.
51 வயதாகும் கனகா தற்போது தனியாக தான் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் கனகாவை அடையாளம் கண்ட ரசிகர் ஒருவர் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் உடல் எடை அதிகமாக, ஆள் அடையாளமே தெரியாமல் போன கனகாவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.